குவைத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பறவைகள்: தனிமைப்படுத்தப்படாமையால் நேர்ந்த கதி

குவைத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பறவைகள்: தனிமைப்படுத்தப்படாமையால் நேர்ந்த கதி

குவைத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விலை கூடிய 62 பறவைகளில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பாது இரகசியமாக விற்பனை செய்யப்பட்ட 14 பறவைகள் மீட்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நாத்தாண்டி - துனகதெனிய பகுதியில் நேற்றைய தினம் குறித்த பறவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பறவைகளை கொண்டுவரும்போது 1992 ஆம் ஆண்டு 59 இலக்க மிருக நோய் கட்டளை சட்டத்திற்கு அமைய அவற்றை கட்டுநாயக்க - நைகந்தேவில் அமைந்துள்ள விலங்குகள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இதன்படி குறித்த பறவைகள் சுமார் ஒரு மாதம் அங்கு இருக்க வேண்டும்.

எனினும் 62 பறவைகளில் 42 பறவைகள் மாத்திரமே தனிமைப்படுத்தலுக்காக அனுப்பட்டுள்ளன. அத்துடன், கால்நடை மருத்துவரின் கண்காணிப்பு இன்றி இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய 20 பறவைகளும், ஒரு ஜோடி 3 லட்சத்து 50 ஆயிரம் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 14 பறவைகளே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

ஏனைய 6 பறவைகளும் ஏற்கனவே வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த பறவைகளை இலங்கைக்கு கொண்டுவந்த கண்டி - நுகவெல பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image