தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பள உடன்பாட்டுக்கான காலப்பகுதி நீடிப்பு

தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பள உடன்பாட்டுக்கான காலப்பகுதி நீடிப்பு

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமையால்; தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக உடன்பாடு தெரிவித்த காலப்பகுதியை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமையால்; தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற் சங்கங்கள், தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை, தொழில் உறவுகள் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறுவப்பட்டுள்ள செயலணிக் கூட்டத்தில், ஊழியர்களை தொழிலிருந்து நீக்காமல் இருத்தல், அனைத்து ஊழியர்களும் தொழலில் ஈடுபடுவதற்கு சமமான வாய்ப்பு வழங்கல், ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிட்டால் இறுதியாக செலுத்தப்பட்ட மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50% வீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்தலும், குறித்த சம்பளத்திற்கு தொழில் வழங்குனர் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கும் பங்களிப்பு செய்தல் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆம் திகதிவரை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றால் சன நடமாட்டம் மற்றும் விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் சுற்றுலாத்துறை பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளமையைக் கருத்தில் கொண்டு, குறித்த துறையின் ஏற்புடைய நிறுவனங்களுக்கும் கொவிட் 19 தொற்று நிலைமையால் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதற்கு இயலாமல் போன் ஏனைய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு மேற்படி சலுகைகளை 2021 மார்ச்சு மாதம் இறுதி வரை நீடிப்பதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் உடன்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image