தனியார் பேருந்துதுறை தொழிற்சங்கங்கள் இன்று விசேட கலந்துரையாடல்

தனியார் பேருந்துதுறை தொழிற்சங்கங்கள் இன்று விசேட கலந்துரையாடல்
 
தனியார் பேருந்துதுறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சில தனியார் பேருந்து தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கூடவுள்ளன.
 
மாகாண நிர்வாகத்தினால் மாதாந்தம் குறிப்பு கட்டணமாக பணத்தை அறவிடுதல் உட்பட மேலும் சில அறவீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கொவிட்-19 பரவல் காரணமாக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளிடமிருந்து  அறவிடப்படவேண்டிய கட்டணங்கள் தற்காலிகமாக   அறவிடப்படமாட்டாது என அரசாங்கத்தினால் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாக தனியார் பேருந்து சங்கங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
எவ்வாறிருப்பினும், சில கட்டணங்கள் தொடர்ந்து  அறவிடப்படுவதாக அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதா? அல்லது வேறு தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தனியார் பேருந்துறை தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image