அரச ஊழியர்கள் நாளை (20) கடமைக்கு சமூமளிப்பது குறித்து பிரதமரின் விசேட அறிவித்தல்!

அரச ஊழியர்கள் நாளை (20) கடமைக்கு சமூமளிப்பது குறித்து பிரதமரின் விசேட அறிவித்தல்!

நாளைய தினம் (20) அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய ஊழியர்கள் கடமைக்கு  சமூகமளிக்க வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

நாளைய தினம் (20) அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய ஊழியர்கள் கடமைக்கு  சமூகமளிக்க வேண்டாம் என நாங்கள் கூறுகின்றோம். இதன் மூலம் இந்த வார இறுதியில் எங்களுக்கு எரிபொருளை சற்று தக்கவைத்துக்கொள்ள முடியும்

அதன் பின்னர் எரிபொருள் பிரச்சினை முடிவுக்கு வரும். எனவே நாளைய தினம் அத்தியாவசியமற்ற அரசு ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டுடாம் என நாம் கூறுகின்றோம். அதேநேரம் அத்தியாவசியமற்ற பயணங்கள் செல்ல வேண்டாம் என்றும் நாங்கள் கூறுகின்றோம். - என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

நாடு மூடப்படும் அபாயம்! ஆனந்த பாலித வெளியிட்ட தகவல்!

மேலதிக நேர கொடுப்பனவை நிறுத்தும் தீர்மானத்திற்கு தாதியர் சங்கம் கண்டனம்!

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தல்

வீட்டில் இருந்து பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படவேண்டும் - ஜே.ஜே. சந்திரசிறி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image