கொவிட்-19 தடுப்பூசி வழங்கலில் இலங்கைக்கு முன்னுரிமை: இந்தியா தெரிவிப்பு

கொவிட்-19 தடுப்பூசி வழங்கலில் இலங்கைக்கு முன்னுரிமை: இந்தியா தெரிவிப்பு

கொவிட் 19 வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க இந்தியா தயாரிக்கும் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்க தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

 

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் இலங்கை வந்த இந்திய அமைச்சர் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தார். இதன்போது இடம் பெற்ற கலந்துரையாடலில், கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சிகிச்சையின் அவசியத்தை சரியாக மதிப்பிட்ட பின்னர், இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிட் தடுப்பூசியைப் பெற இலங்கை விருப்பத்துடன் உள்ளதாக கூறினார்.

தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதாக கலாநிதி ஜெய்சங்கர் உறுதியளித்தார். பரஸ்பர நன்மைகளை அதிகரிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவை பரஸ்பர நன்மையை பெறும் வகையில் மேம்படுத்த ஜனாதிபதியும் இந்திய அமைச்சரும் இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image