1,000 ரூபா சம்பள உயர்வு: வர்த்தமானி வரும்வரை காத்திருப்போம் - முதலாளிமார் சம்மேளனம்

1,000 ரூபா சம்பள உயர்வு: வர்த்தமானி வரும்வரை காத்திருப்போம் - முதலாளிமார் சம்மேளனம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு விடயத்தில், வர்த்தமானி வரும்வரையில் காத்திருப்போம் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


சம்பள நிர்ணய சபையில் நேற்று (01) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

சம்பளம் தொடர்பில் இன்று (01) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த முறை பேசிய விடயங்களையயே நாம் இம்முறையும் கூறினோம். என்ன நடக்கும் என்று பார்க்கலாம். 1,000 ரூபா கதை தொடர்ந்தும் கேட்கப்படுகின்றது. 1,000 ரூபாவை பெறக்கூடிய முறையினை ஒன்றரை வருடத்துக்கு முன்னர் நாங்கள் அறிமுகப்படுத்தினோம். தொழிற்சங்கங்கள் இணங்காதமையால சம்பள நிர்ணய சபைக்கு இந்த விடயம் வந்துள்ளது. அந்த தீர்மானத்திற்கு அமைய நாம் செயற்படுவோம். வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் அல்லவா. வர்த்தமானி வரும் வரை காத்திருப்போம். - என்றார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image