மகப்பேறு உதவி கட்டளைச் சட்டம் குறித்து தெரியுமா?

மகப்பேறு உதவி கட்டளைச் சட்டம் குறித்து தெரியுமா?

கேள்வி -1

1939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேறு உதவி கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுபவர்கள் யாவர்?

பதில்:

இதில், ஏதாவது ஒரு நிறுவனத்தில் அல்லது தோட்டத்தில் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்ணொருவருக்கு மகப்பேறு விடுப்பு, ஊதியம் செலுத்தும் முறை, அதேபோல் மகப்பேற்றுக்கு முன்னர் மற்றும் பின்னரான காலப்பகுதியில் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள் அமைய செயற்படுவதற்கு தொழில் வழங்குநர் கட்டுப்பட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தை இயற்றுவதன் நோக்கம் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதிய மகப்பேறு விடுப்பு வழங்குவதும், பிரசவத்திற்கு முன்னும் பின்னும் அவர்களின் வேலைவாய்ப்பில் சில நிபந்தனைகளை விதிப்பதும் ஆகும்.

 

கேள்வி - 2
மகப்பேறு உதவி கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ளவாங்கப்படாத பெண் ஊழியர்கள் யாவர்?

பதில்:

கடை மற்றும் அலுவலக சட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள்
சிறார் குற்றவாளிகள், அனாதைகள் மற்றும் பேச்சு, கேட்டல் மற்றும் பார்வை திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவில்லை.

கேள்வி - 3

மகப்பேறு உதவி கட்டளைச் சட்டத்தின் கீழ், மகப்பேறு விடுப்பு பெற ஒரு பெண் எவ்வளவு காலம் பணியில் இருக்க வேண்டும்? குறித்த பெண் ஊழியர் சட்டரீதியாக திருமணம் செய்திருக் வேண்டுமா?

பதில்:

இந்தச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற ஒரு நாள் சேவை போதுமானது. மேலும், சட்டப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதாவது, இந்த சலுகைகளை வழங்க திருமண சான்றிதழ் தேவையில்லை.

கேள்வி - 4

மகப்பேறு விடுமுறை மற்றும் சம்பளம் என்ன?

பதில்:

சட்டத்திற்கமைய, முதல் இரண்டு குழந்தைகள் பிறப்பிற்கு 84 நாட்கள் அதாவது 12 வாரங்கள் விடுமுறை வழங்க ஆரம்ப சட்டத்திற்கமைய வழங்கப்படவேண்டும். அதில் இரு வாரங்கள் அல்லது 14 நாட்கள் பிரவசத்திற்கு முன்பாகவும் மிகுதி 10 வாரங்கள் பிரசவத்தின் பின்னரும் வழங்கப்படவேண்டும். பிரசவத்திற்கு முன்னர் 2 வாரங்கள் விடுமுறை எடுக்க முடியாது போனால் பிரசவத்திற்கு பின்னர் முழுமையாக 12 வாரங்கள் வழங்கப்படவேண்டும்.

ஆனால் இந்த சட்டபூர்வமான நிலை 2018 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டு இரண்டு நேரடி முதல் குழந்தைகளுக்கு பதிலாக பிறந்த எந்த குழந்தைக்கும் 84 நாட்கள் அல்லது 12 வாரங்கள் வழங்கப்படும்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image