ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் பின்னர், சுமார் 5 இலட்சம் பேர் தொழில்களை இழந்து அல்லது தொழில்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் அந்த அமைப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
பெண்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் பணியிடங்களில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் என்பனவற்றின் காரணமாக, இந்த ஆண்டு நடுப்பகுதியளவில், சுமார் 7 இலட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும்.
சர்வதேச தரத்தின்படி, பெண்களின் தொழில்வாய்ப்பு நிலைமைகள் ஏற்கனவே குறைந்த மட்டத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமை மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. எனவே, அதனை மீட்பதற்கு உடனடி ஆதரவு தேவை என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆப்கானிஸ்தானுக்கான சிரேஸ்ட இணைப்பாளர் ரமின் பெஸாட் தெரிவித்துள்ளார்.