தேயிலை தொழிலாளர்களின் தோற்றத்தில் வௌியிடப்பட்ட கிரிக்கட் தொடர் கிண்ணம்
தேயிலை தொழிலாளர்களின் தோற்றத்தில் வௌியிடப்ப்ட்ட கிரிக்கட் தொடருக்கான கிண்ணம்.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கட் அணித் தலைவி நிகர் சுல்தானா ஜோட்டி (Nigar Sultana Joty) மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கட் அணித் தலைவி ( Gaby Lewis ) கேபி லூயிஸ் ஆகியோர் டி20 சர்வதேச தொடர் கிண்ணத்தை வித்தியாசமான தோற்றத்தில் நேற்று (04) வெளியிட்டனர்.
சில்ஹெட்டில் (Sylhet) உள்ள தேயிலை தோட்டத்தின் நடுவில் கிண்ணத்தை வெளியிடும் போது அவர்கள் தேயிலை தொழிலாளர்கள் உடையில் தோன்றினர்.
மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடரின் தொடக்க ஆட்டம் இயற்கை எழில் கொஞ்சும் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (05) நடைபெறவுள்ளது.
தேயிலை தோட்டங்கள் பங்களாதேஷின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் மற்றும் அதை மனதில் வைத்து, பங்களாதேஷ் கிரிக்கட் சபை (பிசிபி) கிண்ணத்தின் வெளியீட்டு விழாவை இங்கு ஏற்பாடு செய்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிசிபியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இருவரும் தலையில் துண்டு அணிந்திருப்பதைக் காட்டுகிறது.
ஒரு முறையான தேயிலைத் தொழிலாளியைப் போல அவர்கள் தேயிலை இலைகளைச் சேகரிக்க கூடைகளை வைத்திருந்தனர். இரண்டு அணிகளின் தலைவர்களும் 175 ஆண்டுகால மல்னிசேரா (Malnicherra) தேயிலை தோட்டத்தில் வைத்து 20க்கு 20 தொடருக்கான கிண்ணத்தை வௌியிட்டுள்ளனர்.