பங்களாதேஷில் தீவிரமடைந்த போராட்டம்: பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறினார் பிரதமர்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து நேற்று பதவி விலகினார்.
ஹசீனாவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் வலுப்பெற்றுள்ளன.
நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து மாணவ தலைவர்களால் சிவில் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தின் பின்னர் இம்மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.