கடனாவின் தென் கிழக்கு ஒன்றாரியோ பிராந்தியத்தில் அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு கொவிட் 19 வைரஸ் அடையாளங்காணப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கொவிட் 19 பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு இது பாரிய பங்கம் விளைவிக்கும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதமளவில் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவிருந்த நிலையில் இவ்வைரசஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வோடர்லூ பிராந்தியத்தில் 71 புதிய தொற்றாளர் கள் நேற்று (16) அடையாளங்காணப்பட்டுள்ளனர். அதிவேகமாக பரவக்கூடிய வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளமையானது தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயத்தை தோற்றுவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.