ஐரோப்பாவில் வேகமாக பரவும் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ்

ஐரோப்பாவில் வேகமாக பரவும் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ்

சில தினங்களுக்கு முன், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட, அதிவேகமாகப் பரவக் கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு, தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு, பிரிட்டனில் இருந்து புதிய திரிபு கொரோனா வைரஸுடன் தொடர்புடையவர்கள் வந்திருக்கிறார்கள்.

கனடாவின் ஒன்டாரியோ நகரில் ஒரு தம்பதி கொரோனா வைரஸின் புதிய திரிபால் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கவில்லை அல்லது அதிக நோய் தொற்று ஆபத்து உள்ளவர்களுடன் கூடியவர்களுடன் எந்தவித தொடர்பிலும் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

ஜப்பான் வரும் திங்கட்கிழமை முதல், குடியுரிமை பெறாத பெரும்பாலான வெளிநாட்டவர்களை அந்நாட்டுக்குள் நுழைய, அடுத்த ஒரு மாத காலத்துக்கு தடை விதிக்க இருக்கிறது.

பிரிட்டனிலிருந்து ஜப்பானுக்கு வந்த ஐந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவியிருக்கிறது.

இது போக கூடுதலாக இருவருக்கு இந்த புதிய திரிபு பரவி இருக்கிறது. அதில் ஒருவருக்கு உள்நாட்டில் இருந்த ஒருவர் மூலமாகவே பரவியிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு பற்றிய செய்தி வெளியானதால், கடந்த வாரத்தில், பல உலக நாடுகளும் பயணத் தடைகளை விதித்து இருக்கின்றன.

டிசம்பர் 27 அன்று தான் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சேர்த்து கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப் படுவது தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவத் தொடங்கியதால், பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், முன் கூட்டியே தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கி இருக்கின்றன.

ஜெர்மனியில் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் ஃபைசர் - பயோஎன்டெக் கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்க, இன்னும் ஒரு நாள் காத்திருக்க தாங்கள் தயாராக இல்லை என, வடகிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

பிபிஸி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image