"ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு கதைக்கும் நீதி வேண்டும்"
"ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு கதைக்கும் நீதி வேண்டும்"
2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டும் 157 பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மற்றும் 26 பாலியல் வன்புணர்வு முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கிடைக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் ஸ்ரீலங்கா அமைப்பு தெரிவித்துள்ளது.
பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாடு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் யுனிசெப் ஸ்ரீலங்கா அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நீதித்துறைக்கான அனுசரணை திட்டம், இலங்கை நீதி அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் மற்றும் யுனிசெப் ஸ்ரீலங்கா அமைப்பு ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கின்றது.
பாலியல் வன்முறை உலகளாவிய பிரச்சினை. அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் குரல்களை வலுப்படுத்தவும், பொறுப்புக்கூரலை கோரவும் வன்முறையில்லாத உலகை உருவாக்கவும் நாம் ஒன்றுபட வேண்டும் என்றும் யுனிசெப் ஸ்ரீலங்கா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உலகில் 8 இல் ஒரு பெண் மற்றும் சிறுமிகள் 18 வயதுக்கு முன்னரே பாலியல் வன்புணர்வுக்கு அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்றும் அந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
நாம் இந்த உலகளாவிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் யுனிசெப் ஸ்ரீலங்கா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு கதைக்கும் நீதி வேண்டும் என்றும் யுனிசெப் ஸ்ரீலங்கா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் 4 மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட சிறுவர்களில் 47 சதவீதமானோர் குறைந்தது குறைந்தது ஒருவகையான உடல் அல்லது உளவியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுவர்கள் அதிக உடல் ரீதியான கொடுமைகளை எதிர் எதிர் கொள்கின்றனர். ஆனால் சிறுமிகள் அதிக உளவியல் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் யுனிசெப் ஸ்ரீலங்கா அமைப்பு தெரிவித்துள்ளது.
உடல் ரீதியாக அல்லது உளவியல் ரீதியாக இது நீண்டகால வடுக்களை விட்டுச் செல்கிறது .
பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் ஆன வன்முறை உங்கள் தவறு அல்ல. பேசுங்கள், உதவியை நாடுங்கள், இந்த போக்கை நிறுத்துங்கள். உதவி, ஒரு அழைப்பு தூரத்தில் மட்டுமே உள்ளது.
சமூக அவமதிப்புக்கு பயந்து பலர் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தனியாக இல்லை. நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவர் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்டால் உதவியை நாடவும். வாருங்கள், அமைதியை கலைத்து சமூக இழிவுகளுக்கு முடிவு கட்டுவோம் என்று யுனிசெப் ஸ்ரீலங்கா அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.