ஆட்கடத்தல் பாரிய குற்றமாகும் - அதற்கு எதிராக ஒன்றுபடுவோம்!

ஆட்கடத்தல் பாரிய குற்றமாகும் - அதற்கு எதிராக ஒன்றுபடுவோம்!
இலங்கையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியானது மக்களின் வாழ்விலும், வாழ்வாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிதாக சொல்லத் தேவையில்லை.
இந்த நிலைமை பலரை அவதானம் மிக்க நிலைக்கு கொண்டுசென்றுள்ளதுடன், ஆட்கடத்தல்காரர்களின் பொய்யான வாக்குறுதிகளுக்கு இரையாக்குகிறது. அத்தகைய சூழலில், ஆட்கடத்தல்காரர்கள் ஒருவரைக் கடத்தவும், பலவந்தமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தவும், பலவந்தமாக உழைப்பை சுரண்டவும், உடல் உறுப்புகளைத் திருடவும், பலவந்தமாக யாசகத்தில் ஈடுபடுத்தவும் அல்லது இளவயது திருமணம் போன்ற கட்டாயத் திருமணங்களில் ஈடுபடுத்தவும் முடியும்.
 
 
ஆட்கடத்தலும் அதன் விளைவுகளும் நம்மிடையே மறைந்திருக்கும் புற்றுநோயாக இருப்பதால், இந்த ஆண்டுக்கான 'ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தின்' கருப்பொருள் 'ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் எந்த குழந்தையையும் கைவிட்டு விடாதீர்கள்' என்பதாகும். ஒரு நாட்டின் எதிர்காலத்தை தாங்கி நிற்கும் குழந்தைகள்தான் இந்த பாரிய மனித கடத்தலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும். ஆட்கடத்தலானது புலம்பெயரும் சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு வெளியே மட்டுமல்ல, நாட்டிற்குள்ளும் இடம்பெறலாம். 
 
அண்மைக் காலமாக, இஸ்ரேலுக்கு இலங்கையர்களை தொழிலுக்கு அனுப்புவது குறித்து, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் இடைக்கிடையே வெளியிட்ட கருத்துகள் மற்றும் மியான்மரில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ரஷ்ய போர் முனைகளுக்கு வலுக்கட்டாயமாக இலங்கையர்கள் அனுப்பப்பட்ட சம்பவங்களில் இருந்து, ‘குடும்ப பணவனுப்பல்’ மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, நாடு என்ற அடிப்படையில் எமக்கு இன்னும் சரியான கொள்கை இல்லை என்பது வெளிப்படையானது. இது மிகவும் கவலைக்குரியதாகும்.
 
 
எனவே, இருதரப்பு கூட்டு பேரம்பேசும் ஒப்பந்தங்களில் ஆட்கடத்தலைத் தடுக்கும் சரத்துகளை உள்ளீர்த்தல், நல்ல தொழில் நிபந்தனைகள் மற்றும் நியாயமான தொழிலாளர் நடைமுறைகளை மேம்படுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், தொழிலாளர் சுரண்டலைக் கண்டறிந்து, அதனைத் தடுக்க பயிற்சி வழங்கல், வெளிநாடு சென்றுள்ள மற்றும் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தல், அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து துஷ்பிரயோகங்களையும் தெரிவிக்க அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது அத்தியாவசியமாகும். இதற்காக ஒத்துழைப்புடன் செயற்பட்டு, ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் செயற்திறனுடன் பங்கேற்குமாறு அரசாங்கம், பொறுப்புவாய்ந்த அரசாங்க அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்கள் சமூகத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் நாங்கள்  கேட்டுக்கொள்கிறோம்.
 
நன்றி
 
 
மைக்கல் ஜோக்கீம்
 
'புலம்பெயர்ந்தோர் குரல்' வலையமைப்பின் செயலக குழாம் சார்பில்.
 
(0772277424/0764460972)
 
 
2024-07-26

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image