டெல்டா திரிபிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்வோம்!

டெல்டா திரிபிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்வோம்!

இந்தியாவில் மிக வேகமாக பரவி பல உயிர்களை காவு கொள்ள காரணமாக இருந்த டெல்டா திரிபு கொவிட் 19 வைரஸ் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்டமை தொடர்பில் பலரது கவனம் திரும்பியுள்ளது.

வீரியம் மிக்க, மிக விரைவில் தொற்றக்கூடிய தன்மை கொண்ட டெல்டா திரிபு அடையாளங்காணப்பட்டதையடுத்து அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளங்காணப்படலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. அந்நிலை தோற்றாதிருக்க நாம் சில பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது அத்தியவசியமானது.

ஏனைய திரிபுகள் போன்று டெல்டா திரிபு பரவலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அத்தியவசியமானது நாம் பாதுகாப்புடன் இருப்பதேயாகும்.

 1. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள்

2. ஜன்னல் கதவுகள் மூடப்பட்ட காற்றோட்டம் அதிகம் கிடைக்காத இடங்கள்.

3. ஒருவருக்கொருவர் நெருங்கி இருக்கக்கூடிய இடங்கள்

என்பன பரவக்கூடிய ஆபத்துள்ள இடங்களாகும்.

 தற்போது நாட்டில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு வைரஸ் நாட்டில் வேகமாக பரவுவதை தவிர்ப்பதற்கு இத்தகைய இடங்களுக்கு செல்லாதிருப்பது சிறந்த தீர்வு ஆகும்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் இத்தகைய இடங்களுக்கு செல்லவேண்டியேற்பட்டால் அனைத்து சுகாதார வழிமுறைகளையும் சரியாக பின்பற்றுவதனூடாக பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

அவையாவன,

1. சரியான முறையில் முகக்கவசம் அணிதல்

2. கைகளை கழுவுதல்/ சுத்தமாக வைத்துக்கொள்ளல்

3. 2 மீற்றர் சமூக இடைவௌியை பேணுதல்

என்பன கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளாகும்.

 காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் சிகிச்சைக்கு தவிர வேறெந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வௌியேற வேண்டாம். இது உங்களுடைய சமூகப் பொறுப்பாகும். சிலவேளைகளில் நீங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கும் தொற்று ஏற்படக்கூடும். தடுப்பூசியினால் உங்களக்கு அதிதீவிர சிகிச்சை அல்லது இறக்கும் அபாயம் இல்லாதிருக்கக்கூடும். ஆனால் உங்களினூடாக உங்கள் குடும்பத்தவர்களுக்கு பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மேற்கூறப்பட்ட விடயங்களை சரியான முறையில் பின்பற்றுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொவிட் தொற்றில் இருந்தும் டெல்டா கொவிட் திரிபிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image