கிழக்கு முனையை போராட்டம்: பேச்சுவார்த்தை தோல்வியின் பின் நடப்பது என்ன?

கிழக்கு முனையை போராட்டம்: பேச்சுவார்த்தை தோல்வியின் பின் நடப்பது என்ன?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி காரியாலயத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் கொழும்பு துறைமுக தொழிற்சங்க சம்மேளனத்தின் 12 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவுக்கு வந்ததாக அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அது தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு வழங்கப்படவோமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெளிவாக எடுத்துரைத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையின் பின்னர் ஜப்பானிடம் இருந்து கடன் பெற்று, நிர்மாண பணிகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் உடன்படிக்கையில் உள்வாங்கப்பட்டிருந்ததாகவும், இந்த உடன்படிக்கை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் 51 % உரிமையும் மற்றும் முனையத்தின் நிர்வாகத்தையும் இலங்கை கடற்படை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்துக் கொள்வதற்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரசசினையானது, கொழும்புத் துறைமுக கிழக்கு முனையும் தொடர்பிலா?; ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் பற்றியதா? என்பதைக் குறிப்பிடவேண்டும்.

கடந்த அரசாங்கத்தினால் அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு சீன அரசாங்கத்திற்கு முழுமையாக குத்தகைக்கு வழங்கப்பட்டதாகவும், தாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் துறைமுகத்துக்கு சொந்தமான கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்ததாகவும் அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தித் திட்டமானது, பிராந்திய பூகோள அரசியல் நிலைமைகள், நாட்டின் இறைமை, வருமானம் மற்றும் தொழில்வாய்ப்பு முதலான அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கூறியதன் அடிப்படையில் கிழக்கு முனையத்தின் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளின் 66% இந்தியா பங்களிப்பு செய்யும். 9மூ பங்களாதேஷும், ஏனையவை மேலும் சில ஆசிய நாடுகளின் மீள் ஏற்றுமதியாகும்.  இலங்கை அரசாங்கத்திற்கு 51 % உரிமமும், ஏனைய 49 % உரிமம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும், ஏனைய தரப்பினருக்கும் பங்காளர்களாக கொண்ட முதலீடாக முனையத்தில் அபிவிருத்தி திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் மேற்கு முனையத்தை முனையத்தின் செயற்பாடுகளை துறைமுக அதிகார சபைக்கு கையளிப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, துறைமுக அபிவிருத்திக்கான திட்டத்தை முன்வைப்பதன் முக்கியத்துவத்தையும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 23 தொழிற்சங்கங்கள் தற்போது வரையில் தொழிற்சங்க கூட்டமைப்பாக ஒன்றிணைந்துள்ளன. அவர்கள் தங்களது போராட்டத்தை மேலும் விரிவுபடுத்த தீர்மானித்து இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

துறைமுக சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகேவிடம் வெடபிம வினவியபோது இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

துறைமுக கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்திருப்பதற்கு ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நாங்கள் எதிர்பார்த்தோம். எனினும் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதனை 51 இருக்கு 49 என்ற வீதத்தில் இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் உண்மையான தகவல்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை. எவராவது ஒருவரினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களாகும். ஒரு சதவீத பங்காவது விற்பனை செய்யப்படுமாயின் அதற்கு எதிராக போராடுவதற்கு சபதம் எடுத்தே நாங்கள் இந்த 23 தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டணியை உருவாக்கினோம். மறுபுறத்தில் நாட்டின் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, நாங்கள் தேசிய சக்தி ஒன்றை நிறுவியுள்ளோம். இதன்போது கிழக்கு முனையத்தின் ஒரு பகுதியாவது விற்பனை செய்யப்படுவதை எதிர்ப்பதாக இதன்போது அந்த அனைவரிடமும் நாம் உறுதிமொழியை பெற்றுக் கொண்டோம். எனவே கிழக்கு முனையத்தை பகுதிகளாக விற்பனை செய்வதற்கோ அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கு எந்தவிதத்திலும் எம்மால் இணங்க முடியாது. எனவே, இந்த அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிப்பதற்காக எங்களால் இயன்ற அனைத்து வழிமுறைகளிலும் துறைமுக அதிகார சபைக்கு உள்ளும் அதற்கு வெளியேயும் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்வதற்கு எதிர்பார்க்கின்றோம். – என்று தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சுயாதீன துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவகே இது தொடர்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

நாங்கள் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதி கூறுவதன் அடிப்படையில், இந்தியா இல்லாமல்போனால், இந்த வர்த்தகம் இல்லாமல்போய்விடும் என்பதாகும். அது அவ்வாறு இல்லாமல் போகாது. இது இந்தியாவிற்கு செய்யக்கூடிய வர்த்தகம் அல்ல. எமது துறைமுகமானது, கடற்படை வரைபடத்தின் மையத்தில் அமைந்துள்ளது. எங்களைப் புறக்கணித்து, யாருக்கும், எங்கும் செல்ல முடியாது. நாங்கள் இதுபற்றிய விடயங்களைக் கூறினாலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி தயாரில்லை. இதனை இந்தியாவுக்கு வழங்குவதாக தாமே உறுதியளித்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் தயார்ப்படுத்தியதற்கமைய, ஜப்பானிடம் இருந்து கடன் பெற்று அந்தக் கடனை மீளச்செலுத்தும், திட்டத்தை மாற்றி, 49 சதீவதத்தை வழங்குவது சாதகமானது என்பதைத்தான் அவர் கூறுகிறார்.
கடன்வாங்கி அபிவிருத்தி செய்தால், கடனை மீள செலுத்துவது மாத்திரமே எமக்கு இருக்கும். ஆனால், 49சதவீதத்தை இந்தியாவுக்கு வழங்கினால், துறைமுக அதிகாரசபை என்ற அடிப்படையில் எமக்கு எதுவும் செய்வதற்கு இருக்காது. எனவேதான் இதன் 100% உரிமமும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். ஆகவேதான், துறைமுகத்தை தேசத்தின் உடைமையாக்குவதற்கான போராட்டத்தை நாங்கள் இடைநிறுத்தாமல் கொண்டுசெல்கின்றோம். சைட்டம் ககு எதிரான பொது வேலைத்திட்டம்போல, வெற்றிபெறும்வரை நாங்கள் இதனை முன்னெடுப்போம். – என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்களத்தில் - ப்ரியன் விஜேபண்டார
மொழியாக்கம் - ராஜா

கேலிச்சித்திரம் -  நாமல் அமரசிங்க (நன்றி)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image