பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் சரியான முறை அமுல்படுத்தப்படுகிறதா?

பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் சரியான முறை அமுல்படுத்தப்படுகிறதா?

இலங்கையில் உள்ள பெண்களுக்கு அவர்களுடைய தொழில் ஸ்தாபனங்களில் தொழில் புரிவதற்கான பாதுகாப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கையில் பல சட்டங்கள் பெண்களுக்காக காணப்பட்டாலும் அந்த சட்டங்களை அமுல்படுத்துவதில் பல்வேறு ஸ்தாபனங்களும் தொழில் தருநர்களும் அரசின் பாரியளவில் அக்கறை காண்பிப்பது இல்லை. என்கிறார் ஹட்டன் சமூக நல நிறுவனம் கள ஒருங்கிணைப்பாளர் சி. யோகிதா.

எனவே பெண்கள் மீதான அக்கறைகளையும் கவனங்களையும் அவர்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேலும் வலுவூட்ட இவ்வாறான ஒரு சட்டம் இலங்கையை பொருத்தவரையில் தேவையான ஒன்றாகவே கருதப்படுகிறது.

இலங்கையின் கல்வி, கட்டாயக் கல்வியாக காணப்பட்டாலும் அது சராசரியான 14 வயதிற்கு குறைந்த ஆண் பெண் இருபாலாருக்கும் முக்கிய சட்டம் என்று கருதப்பட்ட போதிலும் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல குறைபாடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது. இன்று மலையகத்தில் வசிக்கக்கூடிய சிறுவர்கள் வேலைக்கு அமரச் செய்யும் சூழ்நிலைகளும், பெண்களை வேலைக்கு அமர்த்தும் சூழ்நிலைகளும், பெண்களை பாதுகாப்பின்றி தொழிலுக்கு அமர்த்தும் சூழ்நிலைகளும் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது. இதுவரைக்காலமும் பெண்களுக்காக இருக்கக் கூடிய இச்சட்டமானது பெண் பிள்ளைகளுக்கு பொருத்தமற்றதாகவும் பெண்களின் பாதுகாப்பு, புறக்கணிப்பு, சுரண்டல்களாக இருப்பதை எம்மால் அறிய முடிகிறது.

ஆகவே பெண்களுக்கான கல்வி விருத்திக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் இவ்வாறான சட்டங்கள் மலையகத்தை பொருத்தவரையில் அமுலாக்கப்படுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

எனவே இப்பிரகடனத்தை அரசு நிறைவேற்றி கையெழுத்திட்டு இந்நாட்டு சட்டத்தில் கொள்கை ரீதியாக அமுல்படுத்தி பெண்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முழுமையாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் சி. யோகிதா கருத்து தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image