தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்காக 10,000 மாணவர்களை திறந்த பல்கலைக்கழகத்தில் இணைக்க பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
இம்மாதம் மாணவர்களை கற்றல் நடவடிக்கை்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கணனிசார் வெற்றிடங்கள் 40,000 வரை காணப்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவானது திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக குறித்த தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு கற்கைநெறி ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.