தேசிய கல்வியியற் கல்லூரி இரண்டாவது தொகுதியனருக்கான நேர்முகத்தேர்வு

தேசிய கல்வியியற் கல்லூரி இரண்டாவது தொகுதியனருக்கான நேர்முகத்தேர்வு

தேசிய கல்வியியற்கல்லூரிகளுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தொகுதி ஆசிரியர் பயிலுநர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 27ம் 28ம் திகதிகளில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தி்ல் நடைபெறவுள்ளது.

கடந்த மே 14,15ம் திகதிகளில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்காதவர்களுடைய இஸட் புள்ளிகளுக்கமைய முன்னுரிமை வழங்கி இந்நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

இதற்கமைய கணித கற்கைநெறிக்கு 49 பேரும் இஸ்ஸாம் கற்கை நெறிக்கு 30 பேரும், வணிக கற்கைநெறிக்கு 29 பேருமாக மொத்தம் 99 பேர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கான கடிதங்கள் தனித்தனியே அவர்களுடைய முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image