நியமனம் கடிதங்கள் கையில் கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லையென்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சி பட்டதாரிகள் அடுத்த வாரத்திற்குள் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் என்று நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம் நியமனக்கடிதங்கள் கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லையென்று சுட்டிக்காட்டியுள்ளது.
நடவடிக்கை எடுக்கும் போது மட்டுமே நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் செயல்படும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 19 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான திகதி அறிவிக்க முடியாமல் போனமை பாரிய பிரச்சினையாகும். 5 மாத சேவைக்காலத்தை இல்லாமல் செய்துள்ள தீர்மானத்தை நீக்கி உடனடியாக நியமனம் வழங்க அழுத்தம் செலுத்த எதிர்வரும் 23ம் திகதி ஒன்றிணைவோம் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.