டொலர் பற்றாக்குறை- வௌிநாடுகளில் இலங்கை தூதரங்களை மூட தீர்மானம்

டொலர் பற்றாக்குறை- வௌிநாடுகளில் இலங்கை தூதரங்களை மூட தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக இரு வௌிநாட்டு தூதரகங்கள் மற்றும் ஒரு கொன்சியுலர் ஜெனரல் அலுவலகம் என்பவற்றை மூட வௌி விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, ஈராக் தலைநகர் பக்தாத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோ நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் என்பவனவும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள கொன்சியுலர் காரியாலயமும் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

இலங்கை முகங்கொடுத்துள்ள கடுமையான டொலர் பிரச்சினையை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இத்தீர்மானத்திற்கு அமைய, ஈராக்குடனான ராஜதந்திர உறவுகள் டுபாயில் அமைந்துள்ள கொன்சியுலர் காரியாலயத்தினூடாகவும் நோர்வேயுடனான ராஜதந்திர உறவுகளை சுவீடன், ஸ்டொக்ஹோம் நகரில் அமைந்துள்ள கொன்சியுலர் காரியாலயத்தினூடாகவும் சிட்னி நகருடனான உறவுகளை கென்பராவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினூடாகவும் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இதுவரை 63 வௌிவிவகார தூதரங்களை கொண்டிருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை 60ஆக குறைக்கப்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாக 60 தூதுவராலயங்களை கொண்டு நடத்துவதே சிரமமான விடயம் என்று வௌிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image