பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்வோருக்கு இலவச காப்புறுதி- அறிவீர்களா?

பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்வோருக்கு இலவச காப்புறுதி- அறிவீர்களா?

 இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச காப்புறுதி இருந்தபோதிலும் பெரும்பாலான இலங்கையர்கள் இது தொடர்பில் அறியாதும் கவனயீனமாகவும் உள்ளனர்.

இதனால் பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காப்புறுதியை வழங்குவதில் பணியகம் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பணியக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காப்புறுதி உரிமத்தை கோருவதற்கான விண்ணப்பம் மற்றும் சமர்ப்பிக்கவேண்டிய தகவல் உட்பட விபரங்கள் அடங்கிய ஆவணத்தை பணியகத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் உங்களுக்குத் தெரிந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்துமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உதாரணமாக

பணியகத்தில் செய்யப்பட்ட பதிவு செல்லுபடியாகும் காலப்பகுதியில் ஏற்படும் நோய், கடுமையாக நோய்வாய்ப்படுதல் (தொழிலில் இருந்தபோது பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ், உறுதிப்படுத்தும் ஆவணங்கள் போன்றவை சமர்ப்பிக்கப்படவேண்டும். அத்துடன் இலங்கைக்கு திரும்பிய பின்னர் பெறப்பட்ட மருத்துவ சான்றிதழும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

  • துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளுக்குள்ளானவர்கள் அவ்விடயம் குறித்து பணியகத்திற்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருப்பது கட்டாயமாகும்.
  • அங்கவீனமுற்ற நிலையில் பாதிக்கப்பட்ட காலத்திலேயே நாடு திரும்பும்பட்சத்தில் புலம்பெயர் தொழிலாளருக்கு 400,000 வரை வழங்கப்படும்.

(மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்கு திரும்புவதற்கான பெறப்பட்ட விமான டிக்கட்டை கொள்வனவு செய்தமைக்கான ரசீது, விலைப்பட்டியல், விமானத்திற்கான அனுமதிச்சீட்டின் பிரதியை கையளிப்பதனூடாக விமானபோக்குவரத்து கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.)

  • செல்லுபடியாகும் காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் இறந்தால் அவரில் தங்கி வாழும்   குடும்ப அங்கத்தினர்களுக்கு 600,000.00 ரூபா வழங்கப்படும்.
  • புலம்பெயர் ஊழியர், பணியகத்தில் பதிவு செய்த செல்லுபடியாகும் காலப்பகுதியில் நாடு திரும்பிய நிலையில் நோய் மற்றும் கடுமையான நோய்காரணமாக நாடு திரும்பி மூன்று (03) மாத காலத்திற்குள் இலங்கையில் மரணம் அடைந்தால், தங்கி வாழும் குடும்பத்திற்கு 250,000 ரூபா நட்டஈடாக வழங்கப்படும்.
  • பதிவு செய்யப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் வாழும் நெருங்கிய உறவுகள் திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உதவித் தொகை வழங்கப்படும்.
  • புலம்பெயர் தொழிலாளரில் தங்கிய வாழும் ஒருவர் திடீர் விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் உதவித் தொகை வழங்கப்படும்.

குறித்த நன்மைகளுக்காக பதிவு செய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து 5 மாதங்களுக்குள் அல்லது சம்பவம் இடம்பெற்று 3 மாதத்திற்குள் புலம்பெயர் தொழிலாளர் அல்லது பதிவு செய்தவர் வௌிநாட்டில் மரணமடைந்து 5 மாதத்திற்குள் குடும்ப உறுப்பினர் ஒருவர் நட்டஈட்டைக் கோரும் சந்தர்ப்பங்கள் கீழே தரப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

காப்புறுதி உரிமத்திற்காக பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு செல்லுபடியாகும். காலப்பகுதியாக இருப்பது கட்டாயம். அத்துடன் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து இலங்கையர்கள் இலங்கை தூதரகத்தினூடாக அல்லது இலங்கையில் அருகில் உள்ள பணியகத்திற்கு கடவுச்சீட்டின் புகைப்படமுள்ள பகுதியின் பிரதி, வீசா பகுதியின் பிரதி அல்லது வேலை அனுமதிப் பிரதி ஆகியவற்றுடன் இலங்கையில் உள்ளவரிடம் தனது பதிவை புதுப்பித்தற்காக அதிகாரத்தை வழங்குவதற்கான கடிதம் (3200 ரூபா மற்றும் வரி) செலுத்தி பதிவு செய்துக்கொள்ள முடியும்.

அதேபோல், மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் தொடர்பில் காலஎல்லைக்குள் தூதரக அலுவலம் அல்லது இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு எழுத்து மூல முறைப்பாடொன்றை வழங்கவேண்டும். அத்துடன் அனைத்து மேலதிக தகவல்கள் மற்றும் தகவல்கள் தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு அல்லது இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியத்தின் அனைத்து மாகாண அலுவலகங்களில் அல்லது பயிற்சி மத்திய நிலையங்களின் முகாமையாளர்கள் அல்லது பிரதான அலுவலக முகாமையாளர்கள் (நலன்புரி) இற்கு வழங்க முடியும். எனவே மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் எடுக்கவும்.

 

முகாமையாளர் (நலன்புரி)
இலங்கை வௌிநாட்டுப் பணியகம்
234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை
கொஸ்வத்த

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image