வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய சுகாதார விதிமுறைகள்

வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய சுகாதார விதிமுறைகள்

இலங்கைக்கு வருகைத்தரும் வௌிநாட்டவர்கள் மற்றும் வௌிநாட்டவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் வௌியிடப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரையில் செல்லுபடியாகும் வகையில் சுகாதார விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் இலங்கை விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன.

ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த விதிமுறைகள் வௌியிடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர்கர்கள், வர்த்தக மாலுமிகள், கடற்படை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இரட்டை பிரஜாவுரிமை உடையோர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜா உரிமையுடையவர்கள் நாட்டுக்குள் நுழைந்தவுடன் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு உடடியாக தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு 11 - 14 நாட்களுக்குள் எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டால் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

இதேவேளை, முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைந்ததும் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தொற்று உறுதி செய்யப்படாவிடத்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரியியன் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

தனிமைப்படுத்தலின் நிறைவில் 14வது நாள் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்படாவிடின் தனிமைப்படுத்தலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இதேவேளை அனுமதி பெற்று இராஜதந்திர மட்டத்தில் நாட்டுக்கு வருகைத்தரும் வௌிநாட்டவர்கள் மற்றும ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் அனுமதிக்கப்படும் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின் 11 -14 நாட்களுக்குள் இரண்டாவது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்படாவிடத்து 14வது நாள் நிறைவில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டுக்குள் நுழையும் அனைத்து வௌிநாட்டவர்கள், அவர்கள் ஏற்றிக்கொண்ட தடுப்பூசி தொடர்பில் ஆராயப்பட்டு, முதலாவது பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image