நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நீர் மின் உற்பத்திக்கு போதுமான நீர் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

சராசரியாக நாளொன்றுக்கு மின்சார உற்பத்திக்கு சுமார் 800 மில்லியன் ரூபா செலவாகும் என இலங்கை மின்சார சபையின் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில், இந்த தொகை 1400 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) வரை நீர் மின் உற்பத்தி 17 வீதமாக குறைவடைந்துள்ளது.

வறட்சியுடனான வானிலையால், தற்போதைய நிலைமை தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image