இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்தார். 

இலங்கையில் இருந்து மேலும் பலர் இஸ்ரேலுக்கு செல்லவேண்டிள்ளனர். அவர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். வௌிவிவகார அமைச்சு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் என்பன இணைந்து இது தொடர்பில் கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கு 071 66 40 560 எனும் WhatsApp இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image