இஸ்ரேல் - பலஸ்தீன் மோதலில் இலங்கையர் ஒருவர் காயம்

இஸ்ரேல் - பலஸ்தீன் மோதலில் இலங்கையர் ஒருவர் காயம்

இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் குறித்து இலங்கை  ஆழ்ந்த கவலையடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, அங்கு வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கும் மோதல்கள் காரணமாக சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் Tel Aviv மற்றும் பலஸ்தீனத்தின் Ramallah ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் குறித்த நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருவதாகவும் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image