மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வு

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வு
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இது தொடர்பில் அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

May be an image of 7 people and people studying

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் எனது அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், மற்றும் துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

May be an image of 9 people and people studying

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல பெருந்தோட்டங்களில் உள்ள அனைவருக்கும் காணி உரிமை அவசியம் என இதன்போது தெளிவாக எடுத்துரைத்தேன்.

May be an image of 3 people, people studying and text

அதற்கான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் எடுத்துரைத்தேன். பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் காணி உரித்து பெற்றுக்கொடுக்கப்படும். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image