வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவத அமைச்சரவை அங்கீகாரம்

வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவத அமைச்சரவை அங்கீகாரம்

சமகாலத்தில் நிலவுகின்ற வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன்கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைய எமது நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவருக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு தினைக்களத்தால் வருகைதரும் வீசா, வதிவிட வீசா மற்றும் பயண வீசா என 3 வகையான வீசாக்கள் வழங்கப்படுகின்றன.

வருகைதரு வீசா மற்றும் வதிவிட வீசா ஆகிய 2 வகையான வீசா முறைமையின் கீழ் வழங்கப்படுகின்ற வீசா வகைகளில் காணப்படுகின்ற சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு அதிகளவிலான வெளிநாட்டவர்களைக் கவர்ந்திழுக்கின்ற வீசா முறைகளைக் கருத்திலெடுத்து எமது நாட்டில் நடைமுறையிலுள்ள வீசா முறையை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image