திருத்தங்களை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீண்டும் தயாரிக்க தீர்மானம்

திருத்தங்களை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீண்டும் தயாரிக்க தீர்மானம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி, அந்த சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞர் குழுவிற்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால், அமைச்சரவைக்கு நேற்று முன்தினம் (28) சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமே தற்போது நடைமுறையில் காணப்படுகின்றது. 

அந்த சட்டத்தை நீக்கி, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, சட்டவரைஞர்களினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலமொன்றை வர்த்தமானியில் வௌியிட கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 

எனினும், வர்த்தமானியில் வௌியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர். 

குறித்த யோசனைகளை கருத்திற்கொண்டு சட்டமூலத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image