உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அவ்வாறான ஊழியர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது 12000 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், அவற்றை நிரப்புவதற்காக தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜானக வக்கும்புர தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் 10000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image