ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாடசாலைக்கு பகுதி பகுதியாக அழைக்க யோசனை

ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாடசாலைக்கு பகுதி பகுதியாக அழைக்க யோசனை

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாடசாலைக்கு பகுதி பகுதியாக பிரித்து வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் பாடசாலைக்கு அழைக்குமாறு ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சுக்கு யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.


நேற்று முன்தினம் (10) பிற்பகல் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளது.

அதேநேரம், தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, பிரயோக ரீதியாக பயன்படுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவித்தல்

அலுவலக சேவைகளை இலக்காகக்கொண்டு புதிய ரயில் சேவைகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image