இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாணமில்லை

இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாணமில்லை

நாட்டில் இன்று (10) முதல், உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

 
நேற்று விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், விருப்பத்தின்பேரில் முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்தத் தடையுமின்றி அதனை அணிந்து கொள்ள முடியும்.
 
அத்துடன், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது பொறுத்தமானது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.
 
அதேநேரம், விசேட நிகழ்வுகளுக்கு அனுமதிப்பதற்கான பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அண்டிஜன் திரையிடல் பரிசோதனைகளும் அவசியமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image