வீதி விபத்துக்களை தவிர்க்க கடும் சட்ட நடவடிக்கை

வீதி விபத்துக்களை தவிர்க்க கடும் சட்ட நடவடிக்கை

வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு கடுமையான சட்டநடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த சட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய போக்குவரத்துசபை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர், குறிப்பாக பஸ், டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றினால் இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 இதேவேளை, வீதி போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் கவனயீனமான முறையில் வாகனம் செலுத்துபவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடகபேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (20) பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 உயிரழந்துள்ளதுடன் 40இற்கும் அதிகமானவர்கள் காயடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image