176 கோடி ரூபா: அபுதாபியில் இலங்கையருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

176 கோடி ரூபா: அபுதாபியில் இலங்கையருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பில், இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹாம்(சுமார் 176 கோடி ரூபா) பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

‘Big Ticket’ 255 ஆவது அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு அண்மையில் நடத்தப்பட்டதுடன் இதில் இலங்கையை சேர்ந்த துரைலிங்கம் பிரபாகர்  20 மில்லியன் திர்ஹாம் பரிசை வென்றுள்ளார்.

16 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அவர், துபாயிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுகின்றார்.

கடந்த 5 வருடங்களாக வெற்றியை எதிர்பார்த்து லொத்தர் சீட்டுகளை வாங்கிவந்த துரைலிங்கம் பிரபாகர், இந்த வெற்றிக்குரிய லொத்தர் சீட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் Online ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

Big_Ticket_abu_dhabi.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image